சென்னை: சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்லும் எத்தியாட் ஏர்வேஸ் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்படத் தயாரான போது விமானத்தில் 228 பயணிகள், 10 விமான ஊழியர்கள் இருந்தனர்.
விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்து ஓடுபாதையில் நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
விமானப் பொறியாளர்கள் குழுவினர், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்த போது விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

More Stories
மைசூரு தசரா விழாவுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு
“தாராபுரத்தில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெல்லும்” – சத்யபாமா உறுதி
செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 4.8 மடங்கு அதிகரிப்பு: ஆகஸ்டில் 98 பேர், செப்டம்பரில் 469 பேர் பாதிப்பு