சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் – நிகோபார் தீவுப் பகுதிகளில் மே 16-ம் தேதி வாக்கில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், இன்று (மே 14) டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 15, 16-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17-ம் தேதி தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, 15-ம் தேதி கோவை, நீலகிரி, 16-ம் தேதி தேனி, 17-ம் தேதி நீலகிரி, 18, 19-ம் தேதிகளில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
ஆம்ஸ்ட்ராங் 2-ம் ஆண்டு நினைவு தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி – குற்றவாளிகளை கைது செய்ய தீர்மானம்
அதிமுக டூ தவெக: டேமேஜ் ஆகிறதா விஜய் இமேஜ்? எடப்பாடி பழனிசாமியின் சைலண்ட் கேம் பின்னணி
முதல்வர் விஜய்க்கு நெருக்கடி.. கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் -தமிழகத்திற்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல்