சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் – நிகோபார் தீவுப் பகுதிகளில் மே 16-ம் தேதி வாக்கில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், இன்று (மே 14) டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 15, 16-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17-ம் தேதி தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, 15-ம் தேதி கோவை, நீலகிரி, 16-ம் தேதி தேனி, 17-ம் தேதி நீலகிரி, 18, 19-ம் தேதிகளில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
மைசூரு தசரா விழாவுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு
“தாராபுரத்தில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெல்லும்” – சத்யபாமா உறுதி
செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 4.8 மடங்கு அதிகரிப்பு: ஆகஸ்டில் 98 பேர், செப்டம்பரில் 469 பேர் பாதிப்பு