பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பானின் அகானேயமகுச்சியுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 21-19, 18-21, 15-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்றது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 19-21, 16-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் குன்லவுத் விதித்சரணிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-12, 21-13 என்ற செட் கணக்கில் ஜப்பானின் தகுமி நோமுரா, யுசி ஷிமோகமி ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

More Stories
எல்எஸ்ஜி அணிக்கு எதிராக படுதோல்வி: பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே முன்னேறும் வாய்ப்பு எப்படி?
பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் சிஎஸ்கே – மீண்டும் லக்னோ அணியுடன் மோதல்
தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பஞ்சாப்? – இன்று மும்பை இந்தியன்ஸ் உடன் மோதல்