காபூல்: ஆப்கனில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன் அடுத்த கட்டமாக, ‘கணவன் – மனைவி பிரிவதற்கான கொள்கைகள்’ என்ற தலைப்பில் தலிபான்கள் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.
அதற்கு ஆப்கன் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார். அந்த சட்டத்திருத்தத்தில், ‘‘ஆப்கானிஸ்தானில் கன்னிப் பெண்கள் மவுனம், திருமணத்துக்கு சம்மதமாகக் கருதப்படும். பெண் குழந்தைகளின் திருமண விஷயத்தில், பருவம் அடைந்த பிறகு, அதை ரத்து செய்வதற்கு தலிபான் நீதிமன்றங்கள்தான் முடிவெடுக்கும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

More Stories
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: மேற்காசியாவில் பதற்றம்
இந்தியா உடனான வர்த்தகத் தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.3.3 லட்சம் கோடி இழப்பு
ஜெர்மனியில் தீவிரமடையும் ஜென்-ஸி போராட்டம்: பிராங்க்பர்ட்டில் கடைகள் சூறை, காவல் துறையினர் மீது தாக்குதல்