May 22, 2026

பழனியில் நகைச்சுவை மன்றம் தொடக்க விழா 

கந்த விலாஸ் என் செல்வகுமார் பங்கேற்பு 

பழனி மே 19

 பழனி அடிவாரம் வி பி எஸ் கிராண்ட் மஹாலில் பழனி நகைச்சுவை மன்றம் சார்பில் தொடக்க விழாவும் நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றமும் நடைபெற்றது. இதற்கு பழனி நகைச்சுவை மன்ற தலைவர் ஏ சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் ஆடிட்டர் வி ஆனந்த சுப்பிரமணியன், பொருளாளர் பில்டிங் காண்ட்ராக்டர் பி நேரு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை  கந்த விலாஸ் அதிபர் என் செல்வகுமார் தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை ஆணையர் வி நந்தகுமார், பழனி போலீஸ் டிஎஸ்பிஎஸ் தனஞ்செயன், வி பி எஸ் கிராண்ட் மஹால் அதிபர் பி பெரியசாமி, ஜவகர் காண்ட்ராக்டர் ஜே மனோகரன், ரெண ஸ்ரீ பொட்டிக் அதிபர் ஏ மூர்த்தி, நகர நிதி நிறுவன உரிமையாளர் சங்கத் தலைவர் எம் மகுடீஸ்வரன்,  காணியாளர் பன்னாடி ராஜா என்ற கந்தசாமி,  நகைச்சுவை மன்ற நிர்வாகிகள் ஜெ சுரேஷ், பி பிரசன்னா, வி. மகாலிங்கம், பி சங்கராலயம் சிவக்குமார், எஸ் ஆர் எம் பாலாஜி, ஆகியோர் உட்பட  ஏராளமானவர்கள் பங்கேற்றனர். முன்னதாக மனித குல மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் உறவுகளா❔ ஊடகங்களா❔ என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் அண்ணா சிங்காரவேலு, திருச்சி அன்னலட்சுமி, ஆரூர் சினேகா, முனைவர் பழனி விருத்தாச்சலம், அருண் ஆகியோர் பங்கேற்றனர்

Spread the love