June 5, 2026

பழனி ரயில் நிலையத்தில் நடைபெறும் 14 கோடியில் நடைபெறும் பணிகளை கோட்டை மேலாளர் ஆய்வு

 பழனி ஜூன் 5

 ரயில் நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ 14 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பயணிகள் காத்திருக்கும் அரை, வாகனங்கள் நிற்கும் இடம், நகரும் படிக்கட்டு, உணவகம் உட்பட நவீன மயமாக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தனி ரயில் மூலம், பழனி ரயில் நிலையத்திற்கு வந்தார்.  பழனி ரயில் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள டிஸ்பிலேக்கள், வாகன பார்க்கிங் பகுதி, பயணிகள் காத்திருப்பரை மற்றும் அனைத்து பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக பழனி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளரை பழனி ரயில் உபயோகிப்பாளர் நல சங்க தலைவர் எஸ் வி நாகேஸ்வரன், செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம், இரணியன் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் பழனியில் இருந்து தாம்பரத்துக்கு இரவு ரயில் சேவையை விட வேண்டும் என்றும், மயிலாடுதுறை டு கோயம்புத்தூர் ரயிலை இரவில் இயக்க வேண்டும் என்றும், சென்னை திருவனந்தபுரம் மற்றும் பழனி வழியாக செல்லும் விரைவு வண்டியை எல் பி எச் கோச்சாக மாற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர் 

Spread the love