September 23, 2026

கீழக்கரையில் கந்தூரி விழாராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைத்தெருவில் அமைந்துள்ள “18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹா”வில் 852ஆம் ஆண்டு கந்தூரி விழா ஆன்மிகச் சூழலில் சிறப்பாக நடைபெற்றது. தர்ஹா வளாகம் முழுவதும் பக்தர்களின் பெருந்திரளால் நிரம்பி, மெளலிது ஓதுதல், சிறப்பு துஆ பிரார்த்தனை மற்றும் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

விழாவின் முக்கிய அம்சமாக நடைபெற்ற டாக்டர் தாஜூதீன் ஃபைஜீ  இன்னிசை நிகழ்ச்சி பக்தர்களை பெரிதும் கவர்ந்தது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், நிறைவாக சுமார் 1000 கிலோ நெய் சோறு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

MRF Association மற்றும் ஓடைக்கரை பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டி இணைந்து விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

Spread the love