June 10, 2026

பழனியைச் சேர்ந்த ஜெயசப்த ஸ்ரீ மாணவி 

ஹைதராபாத்தில் நடந்த சப் ஜூனியர் பேட்மிட்டன் போட்டியில் 

பதக்கம் பெற்றார் 

பழனி ஜூன் 09

 பழனி வட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், செல்வி ஜெயசப்தஸ்ரீ என்ற மாணவி ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான சப்-ஜூனியர் பேட்மிட்டன் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்று, இரட்டையர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இச்சிறப்பான சாதனையைப் பாராட்டும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் செல்வி ஜெயசப்தஸ்ரீக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கார்த்திக் ராஜன், மூத்த நிர்வாகி மகுடீஸ்வரன், பழனி தொகுதி வேட்பாளர் பிரவீன்குமார், பழனி நகர செயலாளர் மிதுன் அவர்கள், நிர்வாகிகளான. நாகராஜ், பழனிபாலன், ஜே.பி.எஸ். சஞ்சய் உட்பட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Spread the love