சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரின் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபேவின் சென் சு யு-வை எதிர்த்து விளையாடினார்.
ஒருதரப்பு ஆட்டமாக வெறும் 27 நிமிடங்களில் முடிவுக்கு இந்த மோதலில் சிந்து 21-6, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்றில் சிந்து, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் மோதுகிறார். அகானே யமகுச்சி கால் இறுதி சுற்றில் 21-14, 21-14 என்ற செட் கணக்கில் இந்தியாவின் தன்வி சர்மாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 32 நிமிடங்கள் நடைபெற்றது.

More Stories
“ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்ற வெறி இருக்கிறது” – ஸ்டீபன் பிளெமிங் மனம் திறப்பு
செஸ் ஒலிம்பியாட் 2-வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி
சச்சின், திராவிட், கங்குலியின் நிபுணத்துவத்தை பயன்படுத்த பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை