ஒட்டன்சத்திரத்தில் த.வெ.க நிர்வாகி டாக்டர்.எம்.முத்து சிறப்பான வரவேற்பு
ஒட்டன்சத்திரம் ஜூன்.
அ.ம.மு.க திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான கே.பி.நல்லசாமி தலைமையில் 2 ஆயிரம் பேர் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.கவில் இணைந்தனர். இவர்களை வரவேற்கும் விதமாக, ஒட்டன்சத்திரத்தில் த.வெ.க நிர்வாகி டாக்டர்.எம்.முத்து தலைமையில்; 500-க்கும் மேற்பட்டோர். ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரவுண்டான சாலையில் வெடி வெடித்து வானவேடிக்கையுடன் பேரணியாக தொடங்கி பஸ்நிலையம் வழியாக அலுவலகம் வந்தடைந்தனர்.
த.வெ.க வில் இணைந்த கே.பி.நல்லசாமி-க்கு டாக்டர்.எம்.முத்து தலைமையில் கிரேன் மூலம் ராட்சத பூ மாலை அணிவிக்கப்பட்டு கௌரவித்து பாராட்டி வரவேற்க்கப்பட்டது. இதில் த.வெ.க நிர்வாகிகள் டாக்டர்.எம்.முத்து, க.ஜோதிமுத்து, ஆர்.ஆர்.பேக்கரி ராஜ்கமல், விஜய், சண்முகவேல் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. த.வெ.க நிர்வாகி டாக்டர்.எம்.முத்து ஆதரவற்ற ஏழை, எளியோருக்கு சீருடை மற்றும் உணவு மாதந்தோறும் வழங்கி வருகிறார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கி வருவதோடு, பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், மருத்துவ முகாம்களையும் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

More Stories
கரூர்
ஈசன் முருகசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட காவேட்டிப்பட்டி பூங்காவில், சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ், வண்ணத்துப்பூச்சி வாழ்விடப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு எம்எல்ஏ திலீப், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.