ஊராட்சி செயளரின் அலட்சியத்தால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு.
ஒட்டன்சத்திரம் ஜூன் :10
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட K.அத்திக்கோம்பை ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணி நிறைவு செய்து பயன்பாட்டிற்கு தயாரான நிலையில் உள்ளது.
இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணி நிறைவடைந்த பின்பு மீதமுள்ள 100க்கும் மேற்பட்ட சிமெண்ட் மூட்டைகளை பாதுகாக்காமல் மழையில் நனைந்து வீணாகி இருப்பது அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக 100 க்கும் மேற்பட்ட சிமெண்ட் மூட்டைகள் அத்திக்கோம்பை ஊராட்சி அலுவலகம் முன்பாக இருந்தும் ஊராட்சி செயலர் கண்டும் காணாமல் நனையவிட்டதாக ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் பலர் இதுசம்பந்தமாக ஊராட்சி செயலரிடம் கூறியும் இது ஒப்பந்ததாரர்கள் தான் பாதுகாக்க வேண்டும். இது எங்கள் பணி இல்லை என்று அலட்சியமாக பதில் கூறி இதை வீணடித்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து மேலும் அரசுக்கு இது போன்ற பொருட்சேதங்கள் நடைபெறாதபடி பாதுகாக்க உறுதி செய்ய சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு