நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் அதிகமான EPFO சந்தாதாரர்களுக்கு PF பணத்தை எடுப்பதை வேகமாகவும், எளிமையாகவும், மேலும் வசதியாகவும் மாற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
PF கணக்கு வைத்திருப்பவர்கள் UPI மற்றும் ATM-கள் மூலம் உடனடியாகப் பணம் எடுக்கும் வசதியை அரசு அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் பணம் எடுக்கும் செயல்முறை மற்றும் வரம்புகள் என்னவென்று பார்க்கலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது EPFO 3.0 தளத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இதன்மூலம் பயனர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதிப் பணத்தை UPI செயலிகள் மற்றும் ஏடிஎம்கள் மூலமாக நேரடியாக எடுக்க அனுமதிக்கும். தொழிலாளர் அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களின்படி, இந்த புதிய அமைப்பு அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது மற்றும் விரைவில் தொடங்கப்படலாம் என தெரிவிக்கப்படுட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் அதிகமான EPFO சந்தாதாரர்களுக்கு PF பணத்தை எடுப்பதை வேகமாகவும், எளிமையாகவும், மேலும் வசதியாகவும் மாற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

epfox page
EPFO உறுப்பினர்கள் UPI அடிப்படையிலான சேவைகளைப் பயன்படுத்தி, தகுதியுள்ள PF நிதிகளைத் தங்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் பயனர்கள் தங்களின் தகுதியான வருங்கால வைப்பு நிதி இருப்பில் 50% முதல் 75% வரை திரும்பப் பெற அனுமதிக்கப்படலாம். இருப்பினும், வரம்புகள் மற்றும் நிபந்தனைகள் அதிகாரப்பூர்வ அமலாக்கத்திற்குப் பிறகே அறிவிக்கப்படும்.

More Stories
டெல்லியில் முதல் மகளிர் காவல் நிலையம் திறப்பு
20 எம்.பி.யை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் திரிணமூல் மனு
என்சிபிஐ கட்சியில் இணைந்த அதிருப்தி டிஎம்சி எம்.பி.க்கள்