ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டார வேளாண்மைத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் தேர்போகி அருகே உள்ள புதுவலசை கிராமத்தில் தென்னந்தோப்புகளில் வயல்வெளி ஆய்வு நடைபெற்றது.

வேளாண்மை துணை இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியர் முனைவர் ஜெகதீசன் ஆகியோர், பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்குள்ளான தென்னந்தோப்புகளை ஆய்வு செய்து, மக்னீசியம் சத்துக் குறைபாடு, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு மற்றும் தஞ்சாவூர் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
மேலும், ரியால் முகமது என்பவருக்கு கால்நடைகளுக்கான தாது உப்பு கலவை வழங்கப்பட்டதுடன், கீழமாங்குண்டு கிராமத்தில் முன்னோடி விவசாயி கார்மேகம் அவர்களுக்கு சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேம்பு சார்ந்த இடுபொருட்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பவித்ரன், சோனியா ஆகியோர் செய்திருந்தனர்.

More Stories
தேசிய முக்குலத்தோர் கழகத்தினர் திருப்பூர் புதிய அதிமுக மாவட்ட செயலாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் .
ஒட்டன்சத்திரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சேவைகள் – நலத்திட்ட முகாம்.
ஒட்டன்சத்திரத்தில்வி.சி.க வணிகர் அணி மண்டல செயற்குழு கூட்டம்,