திண்டுக்கல்.ஜுன்.2-
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் வடக்கு வீதியை சேர்ந்தவர் மகேந்தி ரன்(வயது 37). பூக்கடை நடத்தி வந்தார். அ.தி.மு.க.வில் தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த் தக அணி இணை செயலாள ராக பொறுப்பு வகித்தார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.தோல்வி அடைந்ததாலும், அதன் பின் னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாகவும் கடந்த சில நாட்களாக மகேந்திரன் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் மகேந்திரன் தனது முகநூலில் ஒரு வீடி யோவை பதிவு செய்தார். அதில், “அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து இருப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதிமுக பொதுச்சயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் திண்டுக்கல் எம்ஜிஆர் சிலை முன்பு கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மறைந்த நாகேந்திரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து மறைவு திண்டுக்கல் மாவட்ட அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

More Stories
21 ஆண்டுகள் காத்திருப்பு… கையில் வந்த அரசு வேலை! ஆனா சேர முடியாத சோகத்தில் 60 வயது முதியவர்!
தேனி மாவட்டம்
ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் பசுபதி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை