அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி தொடர்பாக…
அமைச்சர் துரைமுருகன்கோப்புப்படம்
சென்னை: அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சர்களில் அதிக அரசியல் அனுபவம் கொண்டவராகவும், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும் அதேவேளையில் அதிரடியாக பதிலடி கொடுப்பதில் மூத்தவரும் திமுக பொதுச்செயலாளருமான அமைச்சர் துரைமுருகன்(87), வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்காகத் தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், கால் வலியால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் துரைமுருகன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கால் வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தனர்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர், கால் வலி நிவாரண மருத்துகள் பரிந்துரைக்கப்பட்டு, அடுத்த சில நாள்களுக்கு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் அவர், இரண்டு நாள்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.