July 9, 2026

அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார் மீது விசாரணை கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார்

சென்னை: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமைச்சர்கள் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து திமுக துணை அமைப்புச் செயலாளர் ப.தாயகம் கவி அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

வழக்கறிஞர்கள் லெனின் ஜெயபாலன், பார்த்திபன் உள்ளிட்ட இடைத்தரகர்கள், அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் பெயரைக் கூறி விண்ணப்பதாரர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தவெக மாவட்டச் செயலாளர்கள் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒருங்கிணைந்த கூட்டு சதி

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த நியமன முறைகேடு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கு மூலம் உறுதியாகியுள்ளது.

மேலும், திருப்பத்தூரில் ஆடுதிருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றப்பின்னணி கொண்ட ஒருவர், அரசு பொது வழக்கறிஞராக நியமிக்கப்பட் டுள்ளார்.

தகுதியற்றவர்களின் நியமனத்தால் நீதிமன்றங்களில் அரசுக்கு அபராதம் விதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இது மாவட்ட அளவில் நடந்த தனித்தனி தவறுகள் அல்ல; மாநிலம் தழுவி ஒருங்கிணைந்து நடத்தப்படும் கூட்டுச் சதி. எனவே, அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் மற்றும் இடைத்தரகர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத் துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Spread the love