தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், இரு அமைச்சர்களிடையே நிலவும் மோதல் போக்கால், அதிகாரிகள் பாடு திண்டாட்டம் ஆகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக, கும்பகோணம் த.வெ.க., -எம்.எல்.ஏ.,வான வேளாண் துறை அமைச்சர் வினோத் உள்ளார். பாபநாசம் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ.,வும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஷாஜகான் உள்ளார்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்துாரில் முடிவுற்ற கட்டடங்களை, அமைச்சர்கள் ஷாஜகான், வினோத் ஆகியோர் திறந்து வைக்க இருந்தனர். இதற்கான விழா பேனர்கள், நிகழ்ச்சி நிரலில், அரசின் விதிமுறைப்படி அமைச்சர் ஷாஜகான் பெயர் முதலில் இருந்தது.
இதையறிந்த அமைச்சர் வினோத், ‘நான் தான் பொறுப்பு அமைச்சர்; என் பெயர் மட்டுமே இருக்க வேண்டும். கல்வெட்டுகளில் என் பெயர் மட்டுமே இருக்க வேண்டும்’ எனக்கூறி, திறப்பு விழா வை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. கலெக்டர் ரேவதி, வினோத்திடம் பேசி விழாவுக்கு வரவழைக்க, ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடியுள்ளார்.
இதற்கிடையில், கட்டட திறப்பு விழாவுக்கு அமைச்சர் ஷாஜகான் வந்த நிலையில், ஷாஜகான் விழாவுக்கு வந்த விபரத்தை வினோ த்திடம் கூறி, ஒரு கட்டடத்தை மட்டும் திறந்து வைக்க அதிகாரிகள் அனுமதி பெற்றனர்.
அமைச்சர் ஷாஜகான், பேரூராட்சி புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து விட்டு சென்றார். ஆனால், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பிற கட்டடங்களை திறக்க, ஒரு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சிகளை அதிகா ரிகள் ரத்து செய்தனர்.
இதற்கிடையில், கும்பகோணம் மருத்துவமனையில் புதிய ஆய்வகம் திறப்பு விழாவை, அமைச்சர் வினோத் தனியாக நடத்தினார். மேலும், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், மற்ற கட்டட திறப்பு விழாவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி வைத் தார். இதில், அமைச்சர் ஷாஜகான் பங்கேற்கவில்லை.
அதிகாரிகள் கூறியதாவது: இரண்டு அமைச்சர்களிடமும் அனுமதி பெற்று, அரசு விழா ஏற்பாடு செய்வது பெரிய தலைவலியாக உள்ளது. அரசின் விதிப்படி பிளக்ஸ், கல்வெட்டுகளில் ஷாஜகான் பெயர் போடப்படுகிறது. இதற்கு, வினோத் கோபித்து கொள்கிறார்.
பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் வினோத்திடம் நேரம் கேட்டு விட்டு, ஷாஜகானிடம் கூறினால், ‘என்னிடம் முதலில் கேட்க வேண்டும்’ என கூறுகிறார். முதல்வர், இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

More Stories
“விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு தனி அதிகாரமா?” – பெ.சண்முகம் காட்டம்
தொடரும் காவல் மரணங்கள்; முதல்வர் வாய் திறப்பது எப்போது? – மு.க.ஸ்டாலின்
தண்டரை – ஒரகடம் சாலைப்பணி நிறைவு