சென்னை: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில், அரக்கோணம் யார்டில் ரயில்வே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், ஜூன் 1 முதல் 5-ம் தேதி வரை 48 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.
அதன் விவரம்: அரக்கோணம் – திருத்தணிக்கு ஜூன் 1 முதல் 5-ம் தேதி வரை அதிகாலை 4.00, 5.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி – அரக்கோணத்துக்கு அதேநாட்களில் இரவு 9.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள், திருத்தணி – சென்னை சென்ட்ரலுக்கு அதேநாட்களில் காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய 5 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன
பகுதி ரத்து
சென்னை கடற்கரை – அரக்கோணத்துக்கு ஜூன் 1 முதல் 5-ம் தேதி வரை அதிகாலை 4.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், ஆவடி – அரக்கோணத்துக்கு அதேநாட்களில் காலை 6.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் – அரக்கோணத்துக்கு காலை 6.30, 9.10, 10.30, பகல் 11.00, 12.40, மதியம் 1.25, பிற்பகல் 3.45, மாலை 4.45, 5.15, 5.45, 6.05, 6.40, இரவு 7.30. 7.45. 8.20, 9.10, 10.00, 10.55 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள், திருவாலங்காடு – அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
21 மின்சார ரயில்கள், அரக்கோணம் – திருவாலங்காடு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. மொத்தம் 48 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
திருத்தணி – சென்னை சென்ட்ரலுக்கு ஜூன் 1 முதல் 5-ம் தேதி வரை காலை 6.20 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த கோரி ஆளுநரிடம் அதிமுக மனு
அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்
“அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை” – லீமா ரோஸ் விளக்கம்