June 15, 2026

அரசு பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பிற்கு ஸ்பெஷல் பிளான்: அமைச்சர் ராஜ்மோகன் சார்ட்டிங் ஐடியா

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 10, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவது தொடர்பாக முக்கியமான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி அமைச்சர் ராஜ்மோகனின் அறிவுரைகளை விரிவாக பார்க்கலாம்.

அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் பள்ளிக் கல்வித்துறையில் என்னென்ன முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுப்பதில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வி மிகவும் முக்கியமானது. உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில், மாணவர்களின் திறன்களை மெருகேற்றுவதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய பங்காற்றி வருகிறது.

  

அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் ஆய்வு கூட்டம்

அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் ஆய்வு கூட்டம்

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதை அடுத்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்கள், பள்ளிகளில் நேரடி ஆய்வுகள் உள்ளிட்டவை முன்னெடுக்கப்படுகின்றன. இந்த சூழலில் ஜூன் 12ஆம் தேதி அன்று அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் தலைமை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் – விரிவான அறிக்கை

10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் - விரிவான அறிக்கை

2026-27ஆம் கல்வியாண்டில் எவ்வாறு செயல்பட வேண்டும் என விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டில் 10, 12 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி விகிதத்தில் எவ்வாறு செயல்பட்டன என்பது தொடர்பான அறிக்கையை பள்ளி வாரியாக சேகரிக்க வேண்டும். அவற்றை கொண்டு தேர்ச்சியில் பின் தங்கிய பள்ளிகளை மேம்படுத்த வகுக்க வேண்டிய திட்டங்கள் என்னென்ன என முடிவு செய்ய வேண்டும்.

மாணவர்கள் கற்றல் மேம்பாடு – DIET ஒத்துழைப்பு

மாணவர்கள் கற்றல் மேம்பாடு - DIET ஒத்துழைப்பு

அரசு பள்ளிகள் தங்களுடைய நிலையில் இருந்து அடுத்தகட்டத்திற்கு செய்ய வேண்டும். இதற்காக DIET எனப்படும் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கூட்டம் தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறுகையில், பெரும்பாலான பள்ளிகள் தங்களது தேர்ச்சி சார்பான செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே அறிக்கை சமர்பித்துள்ளன.

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் அடங்கிய முதல் காலாண்டில் சி.இ.ஓக்களும், டி.இ.ஓக்களும் செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். இவற்றை மாவட்ட அளவில் பள்ளிகளில் அறிமுகம் செய்ய வேண்டும். இதைப் பற்றி தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

பள்ளி வாரியாக விரிவான செயல் திட்டங்கள்

பள்ளி வாரியாக விரிவான செயல் திட்டங்கள்

எந்த விஷயத்தில் பின்னடைவாக இருக்கின்றனர். அவற்றை எப்படி சரிசெய்யலாம். குறுகிய காலகட்டத்தில் சரிசெய்யக் கூடியவை, தொலைநோக்கு அடிப்படையில் சரிசெய்யக் கூடியவை என பிரித்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். 2025-26ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் 95.2 சதவீதமும், 10ஆம் வகுப்பில் 94.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். அதில் அரசு பள்ளிகளை எடுத்துக் கொண்டால் 12ஆம் வகுப்பில் 91.87 சதவீதமும், 10ஆம் வகுப்பில் 91.87 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை

பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை

இந்த சூழலில் மாநில சராசரியை விட குறைவான தேர்ச்சி பெற்ற மாவட்டங்களின் பள்ளிகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இதுதொடர்பான பட்டியலில் 12ஆம் வகுப்பில் 16 மாவட்டங்களும், 10ஆம் வகுப்பில் 12 மாவட்டங்களும் அடங்கும். இங்குள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடன் கல்வித்துறை அதிகாரிகள் உரிய ஆலோசனை நடத்தி தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு அமைச்சர் ராஜ்மோகன் அடுத்தகட்ட முன்னெடுப்பை எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

Spread the love