June 10, 2026

அரசு பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம்: தெலங்கானா கிராமத்தில் தீர்மானம்

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் உள்ள ஒரு கிராமத்​தினர் தங்களது பிள்​ளை​களை அரசு பள்​ளி​களில் மட்​டுமே சேர்க்க வேண்​டும் என்று ஒரு​மன​தாக தீர்​மானம் நிறைவேற்றி உள்​ளனர்.

தெலங்​கானா மாநிலம், நிர்​மல் மாவட்​டத்​தில் லட்​சுமண் சந்தா எனும் கிராமம் உள்​ளது. இக்​கி​ராம மக்​கள் சமீபத்​தில் ஒன்று கூடி, தங்​களின் பிள்​ளை​களின் வருங்​காலம் குறித்​தும், கல்வி குறித்தும் ஆலோ​சனை நடத்​தினர். இந்த கிராம பஞ்​சா​யத்​தில் உள்ள மக்​கள் பெரும்​பாலும் விவ​சா​யிகள் ஆவர். இவர்​கள் நடத்திய ஆலோ​சனை​யின் இறு​தி​யில் அனை​வரது பிள்ளைகளையும் அரசு பள்​ளி​களில் மட்​டுமே சேர்க்க வேண்​டும் என​வும், தனி​யார் பள்​ளி​களில் சேர்த்து படிக்க வைக்க கூடாது எனவும் ஒரு​மன​தாக தீர்​மானித்​தனர்.

அரசு பள்​ளி​களில்​ தான் நன்கு படித்த ஆசிரியர்​கள், பிள்​ளை​கள் விளை​யாட மைதானம், அறி​வியல் சோதனைக் ​கூடம் என பல்வேறு வசதி​கள் உள்​ளன. எனவே தங்​கள் பிள்​ளை​களை அரசு பள்ளி​களில் சேர்க்க முடிவு செய்​த​தாக அப்​பகு​தி​யின் ஊராட்சி மன்ற தலைவி படிகலா லட்​சுமி தெரி​வித்​துள்​ளார்​.

Spread the love