ஆண்டிபட்டி, பிப். 27,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தகைசால் தமிழர் விருது பெற்றவருமான நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி, ஆண்டிபட்டியில் நேற்று மாலை அனைத்து கட்சிகள் சார்பில் இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது.
ஆண்டிபட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்த ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லகண்ணுவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி இரங்கல் செலுத்தினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பிச்சைமணி தலைமையில் நடைபெற்ற இந்த இரங்கல் ஊர்வலத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரன், நகர செயலாளர் முனீஸ்வரன்.
திமுக சார்பில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராமர்,
திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், எஸ்.எஸ்.புரம் சுப்புராஜ், இளங்குயில் ஞானபாரதி, கோவர்த்தனன்,
மேலும், காங்கிரஸ், வி.சி.க, நாம் தமிழர், பி.ஜே.பி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மறைந்த நல்லகண்ணனுக்குஅஞ்சலி செலுத்தினார்கள். பின்பு ஆண்டிபட்டி பஸ் நிலையத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் எம்.எல்.ஏ.மகாராசன் உள்பட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திராவிட கழக பொறுப்பாளர்கள் இரங்கல் உரையாற்றினார்கள்.

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்