ஆம்பூர், ஏப்ரல்.22-
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.சி.வில்வநாதன் நகர பகுதியில் டீ கடையில் டீ போட்டும், உணவகத்தில் பரோட்டா தயாரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அ. செ.வில்வநாதன் நகராட்சிகுட்பட்ட வார்டு பகுதிகளில் திமுக நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
அப்போது வேட்பாளர் வில்வநாதன் டீ கடையில் டீ போட்டும், உணவகத்தில் பரோட்டா தயாரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
முன்னதாக வேட்பாளர் வருகையை ஒட்டி பகுதிமக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தில் நகரமன்ற தலைவர் பி. ஏஜாஸ் அஹ்மத், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் விஜய் இளஞ்சழியன் உட்பட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது