August 29, 2026

ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்றதால் கர்நாடகாவில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மத்திய அமைச்சர் கண்டனம்

பெங்களூரு: கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற 2 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள யாதகிரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் அந்த மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் குருராஜ் ஜோஷி, அண்ணா சாஹேப் தேஷ்முக் ஆகிய 2 பேரும் பங்கேற்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து யாதகிரி மாவட்ட கல்வி அதிகாரி, “கர்நாடக குடிமைப் பணிகள் நடத்தை விதிகளை மீறி செயல்பட்ட 2 ஆசிரியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Spread the love