மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் இராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு M.பதுவை நாதன் அவர்கள் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு A.செல்வகுமார் அவர்கள் இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி போன்ற பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டார்.

இதில் ஆயில்பட்டி பகுதியில் தகுதி சான்று புதுப்பிக்கப்படாத ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மூன்று டாட்டா ஏஸ் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு ஆயில்பட்டி காவல் நிலைய வளாகத்தினுள் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத ஒரு டாட்டா ஏஸ் வாகனம் சிறைபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலக வளாகத்திலும்,
மற்றும் வெண்ணந்தூர் பகுதிகளில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத நான்கு டாட்டா ஏஸ் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளது .
இச்சிறப்பு வாகன தணிக்கையின் மூலமாக அரசுக்கு இணக்க கட்டணமாக சுமார் 2.20 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
மேலும் அவ் வாகன ஓட்டுனர்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்கப்படாமல் பொதுச்சாலையில் வாகனங்களை இயக்க கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டது . இவ்வாகன தணிக்கை இனிவரும் காலங்களில் இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ஆயில் பட்டி மற்றும் மங்களபுரம் போன்ற பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு M.பதுவைநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

More Stories
கரூர்
கரூர்
விளை நிலங்களில் உயர்மின் கோபுர மின்பாதை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்