ஈரோடு யூ ஆர் சி பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28 வது “ஸ்போர்ட்ஸ் டே” மற்றும் 80-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கழகம் முன்னாள் பதிவாளர் டாக்டர், முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். இந்த நிகழ்ச்சியில் யூ ஆர் சி பள்ளியின் தலைவர் துளசி அம்மாள், துணைத் தலைவர் கனகசபாபதி, பள்ளியின் தாளாளர் சரஸ்வதி அம்மாள், அறக்கட்டளை உறுப்பினர்கள் அபிராமி குகன், சுருதி சக்தி அனீஸ், மாஸ்டர் பிரனவ், ஹர்த்தியா, முதல்வர் ஆர் விஜயலட்சுமி, துணை முதல்வர் டி சுரேஷ், மற்றும் ஜமுனா, அன்பரசு பிரியதர்ஷினி, ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் யூ ஆர் சி பள்ளி நிர்வாக அலுவலர் லோகநாதன் நன்றி கூறினார்.
ஈரோடு

More Stories
தேனி மாவட்டம்
ஈரோடு
15-08-2026