February 23, 2026

உலகத் தமிழாய்வு மாநாட்டில் திருப்பூரை சேர்ந்த புகழ் என்பவருக்கு தமிழ் ஆய்வுச் செம்மல் விருது வழங்கப்பட்டது

பிப் 23

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் புகழ் தமிழாய்வுச் செம்மல் விருது பெற்றார்.உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம், ஒளவைக் கோட்டம் சார்பில் 24வது உலகத் தமிழாய்வு மாநாடு நடைபெற்றது.மாநாட்டில் திரைப்பட இயக்குநர் புகழ் தமிழாய்வு செம்மல் விருது பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மேனாள் துணைத்தூதர் அ.நடராஜன், சமூக சேவகர் தம்பி ராஜா (எ ) ஏ.பி.முகமது, உள்ளிட்ட பலருக்கும் மாநாட்டு இயக்குநர் கலைவேந்தன் மற்றும் ஒளவைக் கோட்ட புரவலர்கள் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆய்வுக்கட்டுரை கருத்தரங்கில் பங்கேற்க பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 

Spread the love