ஒட்டன்சத்திரம், நவ.
ஐஎன்டியுசி – திண்டுக்கல் மேற்கு மாவட்ட தொழிற்சங்க காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இந்தியாவின் இரும்புப் பெண்மணி எனப் போற்றப்படும் முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 42-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஒடவை ஆர். பிச்சைமுத்து தலைமை வகித்தார். இதில், ஐஎன்டியுசி – தமிழ்நாடு பொது தொழிலாளர்கள் காங்கிரஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.கே. களஞ்சியம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, அன்னை இந்திரா காந்தியின் அரசியல் பங்களிப்பு, தியாகம் மற்றும் நாட்டிற்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து புகழுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவரும், முன்னாள் அரசப்பிள்ளைபட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவருமான சுரேஷ்குமார், ஒன்றியத் துணைத் தலைவர் நாச்சிமுத்து, திண்டுக்கல் மாநகர் ஐஎன்டியுசி தலைவர் காளிமுத்து, செயலாளர் செல்வராஜ், மகளிரணி நிர்வாகி மாரியம்மாள், இளைஞரணி பொறுப்பாளர் டி. சுரேஷ் உள்ளிட்ட கட்சி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் காங்கிரஸ் மாநில நிர்வாகி தம்பி (எ) முகமது யாசிர் நன்றி கூறினார்.

More Stories
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ரத்ததான முகாம்
சமூக ஆர்வலர் ஈபி சரவணன் சார்பில் தீபாவளி திருநாள் உதவிகள் வழங்கும் விழா
கரூர் மாநகராட்சிப் பகுதியில் தரைக்கடை வியாபாரிகளிடம் முறைகேடாகப் பணம் வசூல்: த.வெ.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!