July 5, 2026

ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் திருட்டுப் போன 38 பவுன் நகைகள் கார் பைக் மீட்பு!மாவட்ட எஸ்பி பாராட்டு !!

ஒட்டன்சத்திரம் ஜூலை-4

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நல்லா கவுண்டன் நகரை சேர்ந்தவர் காளிமுத்து (75) ஓய்வு பெற்ற மின் ஊழியரான இவர் கடந்த மார்ச் 8ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார்.அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள், ரூபாய் 1லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், மற்றும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை  மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இத் திருட்டு சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில்  திருட்டு சம்பவம் தொடர்பாக 4 பேர் போலீசார் கைது செய்யப்பட்டது  குறித்து மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளத்தபோது கூறியதாவது, திருட்டு சம்பவத்தில் மர்ம நபர்களை பிடிக்க ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்  லிங்கபாண்டி, சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர் அதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் ஒத்த கடை பூசாரிப்பட்டி பட்டினத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ற பொட்டுக்கடலை (35 )அருள் முருகன்( 25) சக்தி முருகன் (20) சங்கீதா (29)என தெரியவந்தது மேலும் அவர்கள் ஒத்தக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை தொடர்பாக கைதாகி சிறையில் இருப்பதும் தெரிய வந்தது இதனை தொடர்ந்து பெரியசாமி, சபரி முருகன் ,சக்தி முருகன், ஆகிய மூவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திருடு போன கார் மீட்கப்பட்டது. இதற்கிடையில் நீதிமன்ற காவலில் இருந்த சங்கீதாவை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் மேல் 38 பவுன் நகை மீட்கப்பட்டது என தெரிவித்தார்

Spread the love