October 24, 2026

ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ஆலோசனை!

ஒட்டன்சத்திரம்: அக்–24

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவது தொடர்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் க.திருமலைசாமி தலைமையில நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் மு.ஸ்வேதா,நகராட்சி பொறியாளர் சுப்பிரமணிய பிரபு மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஹக்கிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நகரப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீர் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Spread the love