ஒட்டன்சத்திரம் .
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஐஎன்டியுசி – திண்டுக்கல் மேற்கு மாவட்ட தொழிற்சங்க காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு, நவ.2-ல் வருகை புரிந்த தொழிலாளர் தோழரும், முன்னாள் வாரியத் தலைவருமான பொன்குமாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது ஐஎன்டியுசி திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் ஒடவை ஆர். பிச்சைமுத்து, பொன்குமாருக்கு சால்வை அணிவித்து மரியாதையுடன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான முகம்மது மீரான், மாநிலப் பொதுச்செயலாளர் குருநாகலிங்கம், சட்டமேதை அம்பேத்கர் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல உரிமைச் சங்கத்தின் சார்பில் சி. நடராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
புதிய அரசு பள்ளி துவக்க விழா
திருப்பூர்
புகழூர் நகர்மன்ற தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்.