July 29, 2026

ஒட்டன்சத்திரம்

எஸ்.எம்.பி.எம் சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை உயிர் காக்கும் உதவி மற்றும் இருதய நுரையீரல் உயிர்ப்பித்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிஒட்டன்சத்திரம் ஜூலை.எஸ்.எம்.பி.எம்-சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியர்களுக்கு அவசர கால சூழ்நிலைகளில்  உயிர்களைக் காப்பாற்றும் திறனை வளர்த்திடும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்டக் கிளை இணைந்து  எஸ்.எம்.பி.எம்-சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை உயிர்காக்கும் உதவி மற்றும் இருதய நுரையீரல் உயிர்ப்பித்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளர் ராஜகுரு தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்க திண்டுக்கல் மாவட்ட கிளைத்தலைவர் டாக்டர்.பி.வேலுச்சாமி, செயலாளர் டாக்டர்.அம்புரோஸ் ராஜூ மற்றும் மருத்துவர் எம்.ஷர்மிளா, இந்திய சிறப்பு பொது நல மருத்துவக் கழகம் திண்டுக்கல் மாவட்ட கிளைத்தலைவர் டாக்டர்.ஏ.ஆசைத்தம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.மருத்துவ நிபுணர்கள் பி.எல்.எஸ்  மற்றும் சி.பி.ஆர் முறைகள் குறித்து தெளிவான விளக்கங்களையும் செயல்முறைப்பயிற்சிகளையும் வழங்கினர். அவசர மருத்துவ நிலைகளை எவ்வாறு அடையாளம் காணவேண்டும் உடனடி முதல் உதவி எவ்வாறு வழங்க வேண்டும், மருத்துவ உதவி கிடைக்கும் வரை சி.பி.ஆர்.ஐ எவ்வாறு சரியாக மேற்கொள்ள வேண்டும் என்பன குறித்து ஆசிரியர்களுக்கு செயல் முறை வீளக்கங்களுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சி அவசர சூழ்நிலைகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படு;ம் திறனை ஆசிரியர்களுக்கு மேம்படுத்தியது.இந்நிகழ்ச்சியில் எஸ்.எம்.பி.எம் சி.பி.எஸ்.இ பள்ளியின் தாளாளர் ஆர்.ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும் அவரது அர்ப்பணிப்பும் அக்கறையும் இத்தகைய பயனுள்ள நிகழ்ச்சிகளுகுத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.  ஆசிரியர்களுக்கு உயிர்காக்கும் அரிய அறிவை பகிர்ந்த செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கேற்று செயல்முறை விளக்கங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலை மிகவும் பாராட்டினர். பள்ளியில் பாதுகாப்பான பொறுப்புணர்வு மிக்க மற்றும் அவசர நிலைகளுக்கு எப்பொழுதும் தயாராக இருக்கும் சூழ்நிலை உருவாகும் உறுதியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்து. உயிர்காக்கும் விழிப்புணர்வு பொறுப்புணர்வு மற்றும் மனித நேய சேவையை வளர்க்கும் செஞ்சிலுவைச்சங்கம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் மற்றும் எஸ்.எம்.பி.எம் சி.பி.எஸ்.இ பள்ளி ஆகியோரின் ஒருங்கிணைந்த   நோக்கத்தை இந்நிகழ்ச்சி மேலும் வலுப்படுத்தியது

Spread the love