June 13, 2026

ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு

புதுடெல்லி: ஓமன் கடலோர பகு​தி​யில் எண்​ணெய் கப்​பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்​திய தாக்​குதலில் 3 இந்தியமாலுமிகள் உயி​ரிழந்​தனர். இதற்கு இந்​தியா கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

போர் நிறுத்​தம் தொடர்​பாக அமெரிக்​கா- ஈரான் இடையே​யான பேச்​சு​வார்த்தை இழுபறி​யில் உள்ள நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்தியை அமெரிக்​கப்​படை முற்​றுகை​யிட்​டுள்​ளது. ஈரான் துறை​முகங்​களை நோக்கி கப்​பல்​கள் செல்​வதை​யும், ஈரான் துறை​முகங்​களில் இருந்து கப்​பல்​கள் வெளி​யேறு​வதை​யும் அமெரிக்​கப்​படை தடுத்​து, ஈரான் வரு​வாயை முடக்கி போர் நிறுத்த ஒப்​பந்​தத்​துக்கு நெருக்​கடி கொடுத்து வரு​கிறது.

இந்​நிலை​யில் பசிபிக் கடல் பகு​தி​யில் உள்ள தீவு நாடான பாலாவ்கொடி பொருத்​தப்​பட்ட ‘செட்​டெபெல்​லோ’ என்ற எண்ணெய் கப்பல் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து ஈரான் துறை​முகத்​துக்கு நுழைய முயன்​றது. இதில் உள்ள 28 மாலுமிகளில் 24 பேர் இந்தியர்கள். இந்த கப்​பலுக்கு பிறப்​பித்த அறி​வுறுத்​தல்​களை பின்​பற்​றாமல் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்க முயன்​ற​தாக அமெரிக்க ராணுவம் குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

இதையடுத்து இந்த கப்​பலின் இன்​ஜின் அறை மீது அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி முடக்​கியது. இதில் இந்​திய மாலுமிகள் ஆதித்ய சர்​மா, சிவானந்த் சவுரேஷி​யா, தலைமை பொறி​யாளர் பட்​னாலா சுரேஷ் ஆகியோர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் இந்​திய கப்​பல் போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சர்​வானந்த சோனோ​வால் கூறுகை​யில், ‘‘செட்டோபெல்லோ என்ற எண்​ணெய் கப்​பல் மீது நடத்​தப்​பட்ட தாக்குதலில் இந்​திய மாலுமிகள் 3 பேர் உயி​ரிழந்​தது துரதிர்ஷ்டவசமானது.

இந்த துயர​மான நேரத்​தில் உயி​ரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு மோடி அரசு துணை நிற்​கிறது. மீட்​கப்​பட்ட இந்​திய மாலுமிகள் உடனடி​யாக நாடு திரும்​புவதை உறுதி செய்ய அதிகாரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளேன். உயி​ரிழந்த மாலுமிகளின் உடல்​கள் இறுதிச் சடங்​கு​களுக்​காக உடனடி​யாக இந்​தியா கொண்டு வரப்​படும்’’ என்​றார்.

இந்​தியா கண்​டனம்

ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கப்​பல்​கள் மீது நடத்​தப்​படும் தாக்குதல் மிகுந்த கவலை​யளிப்​ப​தாக குறிப்​பிட்​டுள்ள இந்​தி​யா, இப்பகு​தி​யில் போர் பதற்​றம் உடனடி​யாக குறைய வேண்​டும் என வலி​யுறுத்​தி​யுள்​ளது. மேலும், டெல்​லி​யில் உள்ள அமெரிக்கதூதரை அழைத்​து, இந்​திய மாலுமிகள் மீதான தாக்குதலுக்​கு தனது கடும்​ கண்​டனத்​தை தெரி​வித்​தது.

Spread the love