October 7, 2026

ஓமன் துணை பைலட்டின் கோடாரி தாக்குதலில் இந்திய பைலட்டின் மண்டை ஓடு உடைந்தது

அபுதாபி: கோ​டாரி தாக்​குதலில் இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ரின் மண்டை ஓடு உடைந்​தது. இதற்​காக சவுதி அரேபி​யா​வில் அவருக்கு அவசர அறு​வை சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டது என்று ஐக்​கிய அரபு அமீரக புல​னாய்வு குழு அதி​காரி​கள் தெரிவித்துள்ளனர்.

ஃபிளை துபாய் விமான கடத்​தல் முயற்​சி​யில் நாள்​தோறும் புதிய தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன. விமானத்​தைக் கடத்த முயன்ற ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி​யிடம் ஐக்​கிய அரபு அமீரக சிறப்பு புல​னாய்​வுக் குழு அதிகாரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதுதொடர்​பாக புல​னாய்​வுக் குழு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: அவசர​கால பயன்​பாட்​டுக்​கான கோடாரி​யால் இந்​திய பைலட் ஸ்மித் மச்​சா​ரின் பின்​னந்​தலை​யில் துணை பைலட் திடீர் தாக்​குதல் நடத்தினார்.

இதில் ஸ்மித் நிலைகுலைந்து கீழே விழுந்​துள்​ளார். இ்த்தாக்​குதலில் அவரது மண்டை ஓடு உடைந்துள்​ளது. ஓர் எலும்பு துண்டு மூளை​யில் பதிந்துள்​ளது.

ஃபிளை துபாய் விமானம் சவுதி அரேபி​யா​வின் தபூக் நகரில் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது. அங்கு அவருக்கு நடத்​தப்​பட்ட மருத்​து​வப் பரிசோதனை​யில் மண்டை ஓடு உடைந்​திருப்​பது உறுதி்யானது. இதைத் தொடர்ந்து அவருக்கு தலை​யில் அவசர அறு​வைச் சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டது. மூளை​யில் பதிந்​திருந்த எலும்​புத் துண்டு அகற்​றப்​பட்​டது.

பைலட் ஸ்மித்​தின் கை, கால்​கள், மார்பு பகு​தி, மேல்​வ​யிறு ஆகிய​வற்​றி​லும் பலத்த காயங்​கள் ஏற்​பட்டு உள்​ளன. தற்​போது அபு​தாபி​யில் உள்ள மருத்​து​வ​மனை​யில் ஸ்மித்​துக்கு சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது. அவரது உடல்​நலம் வேக​மாக தேறி வரு​கிறது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

காசா தாக்​குதலுக்கு பழி​வாங்க சதி

இஸ்​ரேலின் உளவுத் துறை (மொ​சாத்) வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஐக்​கிய அரபு அமீரக தலைநகர் அபு​தாபி​யில் உள்ள ரகசிய இடத்​தில் ஓமன் துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி​யிடம் விசா​ரணை நடத்​தப்​படு​கிறது.

இந்த விசா​ரணை​யில் பங்​கேற்க இஸ்​ரேல் கேபினட் திங்​கள்​கிழமை ஒப்​புதல் அளித்​தது. இதன்​படி மொசாத்​தின் சிறப்பு நிபுணர்​கள், ஐக்​கிய அரபு அமீரக அதி​காரி​களு​டன் இணைந்து ஹமாமி​யிடம் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

காசா மீதான ராணுவ நடவடிக்​கைக்கு பழி​வாங்க இஸ்​ரேல் மீது தாக்​குதல் நடத்த சதித் திட்​டம் தீட்​டிய​தாக அவர் வாக்​குமூலம் அளித்​திருக்​கிறார். அவர் எத்​தனை முறை இஸ்​ரேலுக்கு விமானத்தை இயக்கி உள்​ளார். இஸ்​ரேலில் எங்​கெல்​லாம் சென்​றார். அவர் தனிநபரா, அவரது பின்​னால் தீவிர​வாத இயக்​கம் இருக்​கிறதா என்​பது குறித்து தீவிர வி​சா​ரணை நடத்தி வருகிறோம்​. இவ்​வாறு அந்​த வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

Spread the love