August 14, 2026

ஓலா, உபர் செயலிகளில் ‘டிப்ஸ்’ கேட்​கத் தடை: மத்​திய அரசு உத்தரவு

புதுடெல்லி: சமீப கால​மாக ஓலா, உபர் போன்ற நிறு​வனங்​கள் டாக்சி முன்​ப​தி​வின்​போது ‘அட்வான்ஸ் டிப்ஸ்’, ‘விரை​வாக டாக்சி கிடைக்​கக் கூடு​தல் கட்​ட​ணம் செலுத்​துங்​கள்’ போன்ற அம்சங்களைச் செயலி​யில் புதி​தாக சேர்த்​தன.

இதன் மூலம், கூடுதல் பணம் அளித்​தால் மட்​டுமே ஓட்​டுநர்​கள் சவாரியை ஏற்​றுக்​கொள்​வார்​கள் என்ற தவறான எண்​ணம் பயணி​கள் மத்​தி​யில் நிலவுவதாக மத்​திய நுகர்​வோர் பாது​காப்பு ஆணை​யத்​துக்கு புகார்​கள் வந்​தன.

இதனைத் தொடர்ந்​து, 2025-ம் ஆண்​டின் மோட்​டார் வெகிக்​கிள் அக்​ரி​கேட்​டார் விதி​முறை​களை பின்​பற்​றி, அனைத்து ஆன்​லைன் டாக்சி நிறு​வனங்​களும் தங்​கள் செயலிகளில் டிப்ஸ் தொடர்​பான மாற்​றங்​களை உடனடி​யாக செய்​யு​மாறு மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சகம் அறிவுறுத்தியுள்​ளது.

அதேவேளை​யில், டாக்சி ஓட்​டுநர்​களுக்கு டிப்ஸ் வழங்​கு​வதற்கு மத்​திய அரசு முற்​றி​லும் தடை விதிக்​க​வில்​லை. பயணம் முழுமையாக நிறைவடைந்த பிறகு, ஓட்​டுநரின் சேவைக்​குப் பயணி​கள் தங்​கள் விருப்​பத்​தின் பேரில் ‘டிப்​ஸ்’ வழங்​கிக் கொள்ளலாம். அப்​படி பயணி​கள் அளிக்​கும் டிப்ஸ் தொகை​யில் இருந்து எவ்​விதப் பிடித்​த​மும் செய்​யக் கூடாது.

சுருக்​க​மாகச் சொன்​னால், பயணம் முடிந்து ஓட்​டுநரின் சேவையைப் பாராட்டி டிப்ஸ் வழங்​கலாமே தவிர, டாக்சி சீக்​கிரம் கிடைக்க வேண்​டும் என்​ப​தற்​காக சவாரிக்கு முன்பே கட்​டாயப் பண வசூல் போல டிப்​ஸ் கேட்​கக் கூடாது என்​ப​தை மத்​தி​ய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Spread the love