கம்பம்: கம்பம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்த திருப்பதி. இவர் கம்பம் மேற்கு பகுதியான காட்டுப்பள்ளி வாசல் சாலையில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசு உத்தரவின்படி கடந்த 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி பட்டாசு ஆலை மூடப்பட்டது. மீண்டும் இன்று (சனி) காலை தொழிற்சாலை செயல்படத் தொடங்கியது.
இங்கு கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்த அய்யப்பன் (27) , நாகார்ஜுன் (22) , சாலிமரம் தெருவைச் சேர்ந்த சூர்யா (22) மற்றும் நெல்லு குத்தி புளியமரம் தெருவை சேர்ந்த தினேஷ் (20), ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சூர்யா , தினேஷ் ஆகியோர் வெடி மருந்து எடுப்பதற்காக கிடங்கைத் திறந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் வெடிமருந்து வெடித்தது. இதில் சூர்யா, தினேஷ் தூக்கி எறியப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சிதறிக் கிடந்த சூர்யா , தினேஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். கம்பம் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு