கரூர், நவ. 3
கரூர் மாநகராட்சிப் பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாகத் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்யும் ஏழை வியாபாரிகளிடம் முறைகேடாகப் பணம் வசூலிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க கரூர் மத்திய பகுதி கழகப் பொறுப்பாளர் வி.ஜி.எஸ். குமார் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.கரூர் மாநகராட்சிப் பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தரைக்கடை வியாபாரிகள் தற்காலிகமாகத் கடைகள் அமைத்துத் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களிடம் எந்தவிதமான கட்டணமோ அல்லது பணமோ வசூல் செய்யப்படவில்லை.இந்நிலையில், வருகிற 8.11.2026 அன்று வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு, ஆளுங்கட்சியான த.வெ.கவைச் சேர்ந்தவர்கள் விதிகளுக்குப் புறம்பாக, தற்காலிகத் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்யும் பொதுமக்களிடம் மிரட்டல் விடுத்தும் முறைகேடாகவும் தலா ரூ. 3,500 வரை வசூல் செய்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.எனவே, ஏழை எளிய தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், விதிகளுக்குப் புறம்பாகவும் பணம் வசூலிக்கும் த.வெ.கவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பண்டிகைக் காலங்களில் தற்காலிகக் கடை அமைத்து வியாபாரம் செய்யும் பொதுமக்களின் நலனைப் பாதுகாத்து, உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று மனு அளித்தனர்

More Stories
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ரத்ததான முகாம்
சமூக ஆர்வலர் ஈபி சரவணன் சார்பில் தீபாவளி திருநாள் உதவிகள் வழங்கும் விழா
03-11-2026