October 23, 2026

கரூர் மாவட்டம்

கரூர் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள முருகநாதபுரத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.இங்கு பேக்கரி செல்போன் வாட்ச்  பேன்சி எலக்ட்ரிக் உதிரி பாகங்கள் மிக்சி உதிரிபாகங்கள் எனபல்வேறு கடைகள் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.அதே போல் ஜவகர் பஜார் மற்றும் ஈஸ்வரன் கோயில் ஆகிய இடங்களுக்கு குறுகிய நேரத்தில் இந்த வழியாக செல்லமுடியும்.ஆனால் தற்போது ஒவ்வொரு கடைக்காரர்கள்  தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்காக குறிப்பிட்ட அளவை  தாண்டி பொருட்கள் வைத்துள்ளனர்.இதில் பேக்  பேன்சி வகைகள் எலக்ட்ரிக் சாமான்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லமுடியாத வகையில்  ஆக்கிரமித்துள்ளனர்.தீபாவளி பண்டிகை வருவதால் இந்த முருகநாதபுரம் சாலையின் ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்துவதற்கு கரூர் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Spread the love