சமூக நீதி விடுதியில் சமைக்கப்படும் உணவினை மாணவிகளுடன் சேர்ந்து இரண்டு அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.இதில் புகாருக்கு ஆளாக
சமையலர் ஒருவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத் குமார் பேட்டியில் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சமூக நீதி மாணவ, மாணவியர் விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் விஜயலஷ்மி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 4 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
கரூர் வெங்ககல்பட்டி சமூக நீதி விடுதியில் கடந்த மாதம் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாகக் கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த விடுதியில் அமைச்சர்கள் ஆய்வு செய்து
மாணவிகளுடன் அமர்ந்து அமைச்சர்கள் உணவு அருந்தினர். தொடர்ந்து, மாணவிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்த நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.மேலும் அமைச்சர் சம்பத்குமார் பேட்டியில்
மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து, விடுதியில் பணியாற்றிய சமையலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய சமையலர் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட சமையலருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

More Stories
11-09-2026
கரூர் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 5வது நாளாக பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி அரசு மருத்துவமனையில் கலெக்டர் துர்காமூர்த்தி ஆய்வு