ஆலந்தூர்:கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஆலந்தூர் தெற்கு பகுதி 167வது வட்ட திமுக செயலாளர் ஜெ.நடராஜன் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் எம்.சந்திரன், முன்னாள் எம்எல்ஏ வி.என்.பி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு, கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தூய்மைபணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 500 பேருக்கு காலை உணவான இட்லி, பொங்கல், வடை போன்றவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.கே.இப்ராகிம், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், வட்ட செயலாளர்கள் உலகநாதன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், சால மோன், வேலவன் சரவணா, அணிகளின் நிர்வாகிகள் வாஞ்சிநாதன், தி.எழிலரசு, பாபு, கேபிள்ராஜா, மீன்மோகன், பிரான் சிஸ், சுதர்சன், மாவட்ட பிரதிநிதிகள் லியோ, பிரபாகரன், ரமணா, ஜெயக்குமார், மு.சத்யா மற்றும் பேராசிரியர் சீனிவாசன், ராஜ்குமார், குருமூர்த்தி, சரவணன், சதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

More Stories
குறுவை நிவாரணமா, சிறப்புத் தொகுப்பா? – முதல்வர், அமைச்சர் பதிலில் முரண்பாடு என முத்தரசன் சாடல்
நெடுந்தீவில் தஞ்சமடைந்த 11 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு
கள் தடையை நீக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு