கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மலையில் 6 லட்சத்து 500 விதைகள் தூவப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட வனச்சரகத்தின் சமூக காடுகள் விரிவாக்க திட்டத்தில், அரசம் மற்றும் ஆலம் விதைகள் கிருஷ்ணகிரி மலையில் தூவும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வனச்சரக அலுவலர் மூர்த்தி, வனவர்கள் மகேந்திரன், வேணு மற்றும் பள்ளி மாணவ, மாணவியர், ஆசியர்கள் கலந்து கொண்டு, மலை முழுவதும் 6 லட்சத்து 500 விதைகளை தூவினர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான யோகா ஆசிரியர் வெங்கடேசன், விதைகளை தூவுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மாணவ, மாணவியருக்கு எடுத்துரைத்தார். அதில், விதைகளை பரப்புவதில் பறவைகள், யானைகளின் பங்கு அதிகமாக உள்ளது.
இவை ஆண்டுக்கு பல லட்சம் விதைகளை காடுகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீசி வருகின்றன. நாம் இப்போது விதைக்கும் இந்த விதை அடுத்த 20 ஆண்டுகள் கழித்து மக்களுக்கு பல்வேறு பயன்களை தரும். காடுகள் இல்லையென்றால் மனிதர்கள் வாழ முடியாது.
ஏனெனில் ஆக்சிஜனை அதிகளவில் மரங்கள் தான் நமக்கு தருகின்றன. விலங்குகள் பாதுகாப்புடன் வாழவும் அடர்ந்த காடுகள் தான் உதவி செய்கின்றன. இந்த காடுகள் தான் மழை பெய்யவும் உதவி செய்கின்றன. எனவே மரங்களை வளர்ப்போம். வருங்கால சந்ததிகளை காப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

More Stories
ரூ.400 கோடி மோசடி வழக்கு: முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமின் மனு விசாரணை நவம்பர் 2-க்கு தேதிக்கு ஒத்திவைப்பு!!
தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் போலீஸாரிடம் சிக்கினர்