
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில் இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கியை கைப்பற்றி உள்ளனர்.

More Stories
78 வயதிலும் ஜல யோகா செய்து ஆரோக்கியம் காக்கும் பாட்டி
பண்டைய வங்கமொழியின் வைஷ்ணவ பக்திப் பாடல்கள் தமிழில் மொழி பெயர்ப்பு
கோவா சட்டவிரோத சுரங்க வழக்கில் ரூ.1,023 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை