ஒட்டன்சத்திரம் ஜூன்.
ஒட்டன்சத்திரம் வட்டம், லெக்கையன்கோட்டை ஊராட்சி சாலைப்புதூர் ஏழை மாணவனுக்கு உயர் கல்வி பயில அரசுப் பள்ளியில் சேர்க்கைக்காக போராடி வெற்றிபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் – இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சு.வடிவேலுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, லெக்கையன்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சாலைப்புதூரில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயில விரும்பிய மாணவர் மு.சந்துரு. இம்மாணவர் விளையாட்டுத்துறையில் மிகவும் ஆர்வமாக குறிப்பாக கபடிப்போட்டியில் சேர்ந்து விளையாடி மாநில அளவிலான சாதனை புரிய விரும்பினார். மேலும் உயர் கல்வியை முடித்துவிட்டு காவல்துறையில் உயர் பதவி பெற வேண்டும் என்ற ஆவலுடன் படித்து வந்தார்.
இந்நிலையில் சில விரும்பத்தகாத நிகழ்வாக அம்மாணவனுக்கு உயர்கல்வி என்ற கனவு கலையும் விதமாக ஒட்டன்சத்திரத்தில் உள்ள கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் – பெற்றோர் ரேவதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் சு.வடிவேல் அவர்களிடம் முறையிட்டார்.
ஏழை மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து இது சம்மந்தமாக ஆலோசனை செய்து ஏழை மாணவனின் கோரிக்கையின் படி மீண்டும் அதே பள்ளியில் உயர்கல்வி பயில அனுமதியை பெற்றுத்தந்தார்.
ஏழை மாணவனுக்கு உயர் கல்வி பயில உதவிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் சு.வடிவேல் மற்றும் தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கம் மாநில,நகர பொறுப்பாளர்கள்
வீ.செல்லத்துரை, ஆர்.முத்து, டி.சக்திராஜா, ஆர்.கண்ணுச்சாமி, மதுரை மணி சே.சதீஸ்குமார், ஏ.பாலாஜி, பிருந்தா, கலாராணி, ரூபன் பிரசாந்த், சமூக ஆர்வலர் பி.ஆறுமுகம் ஆகியோருக்கு பெற்றோர், சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்தனர்.

More Stories
ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்இரத்ததானம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
“அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் சக்கரவாள நல்லூர் மக்கள் – மாவட்ட ஆட்சியரிடம் மனு
இராமநாதபுரம் மாவட்டம்