ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தலைவர் ஷேக் உசைன் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் பிலால் அப்துல்லா மற்றும் பொருளாளர் ஜமால் அஸ்ரப் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் இந்திரா காந்தி வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக வருவாய் கோட்டாட்சியர் ஹபீப் ரஹ்மான், முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) இரவீந்திரன் மற்றும் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அகமது உசேன் ஆசிப் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினர்.
மேலும் முஹம்மது சதக் டிரஸ்ட் சார்ந்த தொழிலதிபர்கள் ஹாமிது இப்ராஹிம் மற்றும் சதக் அப்துல் காதர் கௌரவ அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அருட் செல்வி ஆண்டறிக்கையை வாசித்தார். தொடர்ந்து கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சாரப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக நிர்வாக அதிகாரி சையது இப்ராஹிம் நன்றி கூறினார்.
நூற்றாண்டை எட்டிய இப்பள்ளி கல்வி மற்றும் ஒழுக்கநெறி வளர்ச்சியில் சிறப்பான பங்காற்றி வருவது விழாவில் குறிப்பிடப்பட்டது.

More Stories
திண்டுக்கல் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் திண்டுக்கல் சிஎஸ்ஐ தூய பவுல் ஆலயத்தில் ஓட்டு சேகரித்து உதயசூரியன் சின்னத்தில் சபை மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்
திண்டுக்கல் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் IP.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏ எம் சி சாலை ஆரோக்கிய மாதா தெரு போடிநாயக்கன்பட்டி தெய்வசிகாமணிபுரம் போன்ற பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு செய்தார் உடன் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ராஜப்பா திண்டுக்கல் மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் திண்டுக்கல்இந்திய தேசிய காங்கிரஸ்
சாத்தூர்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. பணியில் இருந்த 60க்கும் மேற்பட்டோரின் நிலை?