July 12, 2026

குழந்தை திருமணத்தை​ தடுக்கும் சிங்கப்பெண் படை​: இடைநிற்றல் மாணவ-​மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்

சென்னை: பெண்​கள் மற்​றும் குழந்​தைகளின் பாது​காப்பை உறு​தி​செய்​யும் நோக்​கில் தமிழக காவல் துறையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ உருவாக்கப்பட்டது.

இப்​படை​ கடந்த 3 முதல் 9-ம் தேதிவரை மேற்​கொண்ட நடவடிக்​கைகள் குறித்த விவரங்​களை டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை தலை​வ​ரான ஐஜி பவானீஸ்​வரி வெளி​யிட்​டனர்.

அதன் விவரம்: மாவட்ட அளவி​லான களப்​பிரிவு​கள் பெற்ற 371 புகார்​களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்​து, அதில் 25 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. காணா​மல்​போன 7 பெண்கள், 6 குழந்​தைகள் என மொத்​தம் 13 பேரை மீட்​டு, அவர்​களது குடும்​பத்​தினரிடம் ஒப்​படைத்​தனர்.

அறி​வு​சார் குறை​பாடுடைய 12 பேர் மீட்​கப்​பட்​டு, அவர்​களுக்கு உரிய மறு​வாழ்வு வசதி​கள் செய்​யப்​பட்​டன. பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​களை தடுக்க 3,882 விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டன.

மேலும் குற்​றங்​கள் நடை​பெற வாய்ப்​புள்ள 9,507 இடங்​களில் தீவிர ரோந்து, கண்​காணிப்​புப் பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்​டன. இந்த கால​கட்​டத்​தில் ஒரு குழந்​தைத் திரு​மணம் தடுத்து நிறுத்​தப்​பட்​டதுடன், பள்​ளிப் படிப்பை பாதி​யில் நிறுத்​திய 57 குழந்​தைகள் மீண்​டும் பள்​ளி​களில் சேர்க்​கப்​பட்​டனர்.

செங்​கல்​பட்​டில் அரசுப் பேருந்​தில் பெண்​ணுக்கு பாலியல் தொந்​தரவு அளித்த நபர் கைது செய்​யப்​பட்​டார். காஞ்​சிபுரத்​தில் பிச்​சை யெடுக்க வற்​புறுத்​தப்​பட்ட அறி​வு​சார்குறை​பாடுடைய பெண் ஒரு​வர் மீட்​கப்​பட்​டு, அவருக்கு பாது​காப்பு மற்​றும் மறு​வாழ்​வுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.

திருப்​பூரில் பள்​ளிக்​கல்​வித் துறை மற்​றும் குழந்​தைகள் உதவி அமைப்​புடன் இணைந்து 33 பள்ளி இடைநிற்​றல் மாணவ-​மாணவி​கள் மீண்​டும் பள்​ளி​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு பாது​காப்​பான சமூகச் சூழலை உரு​வாக்​கும் நோக்​கில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை தொடர்ந்​து செயல்​பட்​டு வரு​கிறது என்​று தெரி​வித்​தனர்​.

Spread the love