சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை ஒப்படைக்கக் கோரி போராடிய பயனாளிகளை காவல் துறையை ஏவி கைது செய்திருக்கும் தவெக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்துக்குரியது’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை ஒப்படைக்கக் கோரி போராடிய பயனாளிகள் மீது காவல் துறையை ஏவி கைது செய்திருக்கும் தவெக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்துக்குரியது.
தங்களின் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய துறை சார்ந்த அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினரும் வராமல் காவல் துறையை பயன்படுத்தி, அவர்களை ஒடுக்க நினைப்பது சர்வாதிகாரப் போக்கே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
எனவே, பயனாளிகளுக்கான வீடுகள் விரைந்து ஒதுக்கீடு செய்யப்படுவதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும், தவெக அரசும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

More Stories
”ஊழலில் ஈடுபட்டால் பதவி பறிக்கப்படும்” – அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை!
ஒரு உள்ளாட்சி எல்லையில் வசிப்பவர்கள் மற்றொரு உள்ளாட்சி மயானத்தை பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் போக்சோ வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்