October 12, 2026

கோவை குறிச்சிக் குளத்தில் அரிய வகை பறவைகள் வலசை

கோவை: கோவை குறிச்​சிக்​குளத்தில் அரிய வகை பறவையான கழுத்​துப்​பட்டை பிராட்​டின்கோல் பறவைகள் வலசை வந்துள்ளன.

கோவை குறிச்​சிக்​குளத்தில் கரண்டி அலகுப் பறவைகள், கருஞ்​சிறகு கொக்குகள், பசிபிக் பொன் பிளவர், திபெத்திய பிளவர், கென்டிஷ் பிளவர், கரு

வால் கோட்விட், டெம்மின்க்ஸ் ஸ்டிண்ட், மீசை ஆலா மற்றும் பிற நீர்ப்​பறவை​களுக்கு மத்தி​யில், இறகுகளுடன் கூடிய 3 கழுத்​துப்​பட்டை பிராட்​டின்கோல் பறவைகள் காணப்​பட்டன.

பறவை ஆர்வலர்கள் பார்வதி ரவிக்​குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பறவையை அடையாளப்​படுத்​தினர். பறவையியல் நிபுணர் கஜமோகன்​ராஜ், கோவை இயற்கை கழக உறுப்​பினர்கள் கள ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, இது ‘காலர்டு பிராட்​டின்​கோல்’ என்பதை​யும், அரிய ரகம் என்பதையும் உறுதி செய்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்​போது, “கழுத்​துப்​பட்டை பிராட்​டின்கோல் மத்திய ஆசியா மற்றும் தென்மேற்கு ஆசியாவில் கஜகஸ்​தான், ஆப்கானிஸ்​தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தி​யாவின் குஜராத் உட்பட, தனது இனப்பெருக்கப் பகுதி​களில் தோன்றி, பின்னர் தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்ப இந்தி​யா​விற்கு வலசை வந்துள்ளது.

இந்த ரக பறவைகள் தமிழ்​நாட்டில் சென்னை, கன்னி​யாகுமரி மற்றும் மதுரையில் கடந்த காலங்​களில் தென்பட்​டுள்ளன. தற்போது குறிச்​சிக்​குளத்தில் 3 பறவைகளை பார்த்​தோம்.

உலகளாவிய புவி மாற்றங்கள் மனிதர்களை மட்டுமின்றி, பறவைகளையும் திக்கு​முக்காட வைக்கின்றன. அரிய வகையான இந்த பறவை கோவை குளத்​துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தரு​கிறது” என்​றனர்.

Spread the love