July 23, 2026

சிக்கிமில் சுரங்கப் பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு 20 ஆக அதிகரிப்பு

மேலும் 5 பேரை மீட்கும் பணி தீவிரம்

காங்டாக்: சிக்கிம் மாநிலத்​தில் நீர்​மின்​சார திட்ட சுரங்கப் பாதை இடிந்து விழுந்த விபத்​தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

சிக்​கிம் மாநிலத்​தின் நாம்ச்சி மாவட்​டம், சமர்​துங் பகு​தி​யில் தேசிய நீர்​மின்​சக்தி கழகம் (என்​எச்​பிசி) சார்​பில் தீஸ்தா நதி மீது 34.5 மீட்​டர் உயர அணை​யுடன் கூடிய மின்​னுற்​பத்தி நிலை​யம் கட்டப்​படு​கிறது. இதன் கட்​டு​மானப் பணியை படேல் இன்ஜினீயரிங் நிறு​வனம் மேற்​கொண்​டுள்​ளது.

இந்​நிலை​யில் நீர்​மின் திட்ட சுரங்​கப் பாதைக்குள் கடந்த திங்கட்கிழமை மதி​யம் 1 மணி​யள​வில் மீத்​தேன் வாயுக்​ கசி​வால் திடீர் வெடி​விபத்து ஏற்​பட்​டது. இதில் சுரங்​கத்​தின் ஒரு பகுதி இடிந்து விழுந்​ததில் அதி​காரி​கள் உட்பட 25 தொழிலா​ளர்​கள் உள்ளே சிக்​கிக் கொண்​டனர். இதையடுத்து பல்​வேறு அமைப்புகள் சார்​பில் அங்கு மீட்​புப் பணி தொடங்​கியது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சோனம் டி.பூட்டியா நேற்று கூறுகை​யில், “சுரங்​கத்​துக்​குள் சிக்​கிய 25 பேரில் 20 பேர் உயி​ரிழந்​தது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இது​வரை 12 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன. இதில் 7 உடல்​கள் அடையாளம் காணப்​பட்​டுள்​ளன. சுரங்​கத்​துக்​குள் சிக்​கிய எஞ்சிய 5 பேரை மீட்​கும் பணி தொடர்​கிறது. மீட்​புப் பணிக்கு உதவிட அண்டை மாநில​மான மேற்கு வங்​கத்​தில் இருந்து சிறப்பு சுரங்க மீட்​புக் குழு வந்​துள்​ளது” என்​றார்.

சிக்​கிம் முதல்​வர் பிரேம் சிங் தமாங்​குடன் பிரதமர் நரேந்​திர மோடி தொலைபேசி​யில் பேசி சூழ்​நிலையை கேட்​டறிந்​தார். அப்​போது மத்​திய அரசு சார்​பில் தேவை​யான அனைத்து உதவி​களும் வழங்​கப்​படும் என பிரதமர் உறுதி அளித்​தார். மேலும், இறந்தவர்களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.2 லட்​ச​மும், காயம் அடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50 ஆயிர​மும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது​போல் மாநில அரசு சார்​பில் உயி​ரிழந்த தொழிலா​ளர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.4 லட்​ச​மும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிர​மும் நிவாரண​மாக வழங்கப்​படும் என முதல்​வர் தமாங் அறி​வித்​துள்​ளார்.

Spread the love