சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பின்னர் அரசியலுக்கு வந்தவர் சீமான். மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும், சீமானுக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து, 2019 ஜனவரியில் ஆண் குழந்தை பிறந்தது. மாவீரன் பிரபாகரன் என அக்குழந்தைக்கு பெயரிட்டனர்.
இந்நிலையில்,தற்போது மீண்டும் 7 ஆண்டு இடை வெளிக்கு பிறகு, சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு நேற்று 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

More Stories
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ரத்ததான முகாம்
சமூக ஆர்வலர் ஈபி சரவணன் சார்பில் தீபாவளி திருநாள் உதவிகள் வழங்கும் விழா
கரூர் மாநகராட்சிப் பகுதியில் தரைக்கடை வியாபாரிகளிடம் முறைகேடாகப் பணம் வசூல்: த.வெ.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!