சென்னை: கடற்கரை, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து, தமிழக கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற மருத்துவர் அருண்ராஜ், குதிரைகளிடம் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல் குறித்து அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, தமிழக கால்நடை பராமரிப்புத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு: சென்னையில் குதிரைகளுக்கு கிளண்டர்ஸ் பாக்டீரியா தொற்று பரவல் எதிரொலி காரணமாக, குதிரை சவாரிக்கு உடல் நலக்குறைவாக உள்ள குதிரைகளை பயன்படுத்த வேண்டாம்.
குதிரைக்கு காய்ச்சல், இரும்மல், மூக்கில் சளி வடிதல், தோல் புண்கள், சுவாசக் குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அந்த குதிரைகளை சவாரிக்கு உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது. குதிரைகளின் தேவையற்ற போக்குவரத்தை தவிர்க்க வேண்டும்.
நோயுற்ற குதிரைகளை தனிமைப்படுத்த வேண்டும். குதிரை இருப்பிடங்கள் மற்றும் உபகரணங்களை முறையாக சுத்தம் செய்து கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும்.
சென்னை உள்ளிட்ட பல கடற்கரைகளில் குதிரை சவாரி ஈடுபடுபவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களிலும் குதிரை சவாரியில் ஈடுபடுபவர்கள் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சவாரி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
திருச்சி – விழுப்புரம் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்: வெற்றிகரமாக நடத்தியது தெற்கு ரயில்வே!
தமிழக இந்து அறநிலையத் துறைக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை
ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது